தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மலைக் கிராமங்களில் பழங்குடி மக்களின் குறைகளை ஆர்.செல்லசுவாமி எம்.எல்.ஏ கேட்டறிந்தார்

5 Jun 2026, 10:59 pm
மலைக் கிராமங்களில் பழங்குடி மக்களின் குறைகளை ஆர்.செல்லசுவாமி எம்.எல்.ஏ கேட்டறிந்தார்

மலைக் கிராமங்களில் பழங்குடி மக்களின் குறைகளை ஆர்.செல்லசுவாமி எம்.எல்.ஏ கேட்டறிந்தார்

நாகர்கோவில், ஜூன் 5- பத்மநாபபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.செல்ல சுவாமி, ஜூன் 5 வெள்ளியன்று பேச்சிப் பாறை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மலைக் கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள காணி பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மணலோடையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிக்கு சென்ற வர், ஆசிரியர்களிடமும் பெற்றோர் களிடமும் குறைகளை கேட்டறிந் தார். பள்ளிக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் உரிய நேரத்தில் வந்து செல்வதற்கு பேருந்து வசதி செய்யப்பட வேண்டும். மலை கிரா மங்களில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழி யாக மாணவர்கள் நடந்துவரும் சூழ்நிலை உள்ளது. அவர்களுக்கு மழைக்காலங்களில் அணிய

ரெயின் கோட்டு வழங்கப்பட வேண்டும். வலிய மலையிலிருந்து கறையான்குற்றி வரும் வழியில் உள்ள ஓடையை கடந்து மாண வர்களால் பள்ளிக்கூடம் வர முடிவ தில்லை. எனவே, அப்பகுதியில் சிறு பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதற்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பி னர், உரிய நடவடிக்கை மேற்கொள் வதாக உறுதியளித்தார். கிள்ளிகோணம், ஆலம்பாறை, கொடுத்தற மலை உள்ளிட்ட மலை கிராமங்களில் மின்சார பிரச்சனையல், குழாயிருந்தும் குடிநீர் வருவதில்லை. போக்கு வரத்து , சாலை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும், வனவிலங்குகளை கட்டுப்படுத்த மின்வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வீடு கட்ட அனுமதிக்காத வனத்துறை

அன்பு நகர் மக்கள் கூறுகை யில், அரசின் வீடு கட்டும் திட்டத் தின் கீழ் தேர்வு செய்யப்பட்டாலும், கட்டுமான பொருட்கள் கொண்டு வர வனத்துறையினர் அனுமதிக்கா ததால், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. இதில் தலையிட்டு உதவு வதாக சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ தெரி வித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள். எஸ். சி. ஸ்டாலின் தாஸ், ஆர். ரவி, மாவட்ட குழு உறுப் பினர் பி. விசுவாம்பரன், தோட்டம் தொழிலாளர் சங்கத் தலைவர் நட ராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.