மாறாமலையில் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பழங்குடி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்
27 Oct 2026, 9:16 pm

மாறாமலையில் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பழங்குடி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

நாகர்கோவில், அக்.27-கன்னியாகுமரி மாவட்டம் மாறாமலை மலைப்பகுதிகளில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி அக்டோபர் 27 செவ்வாயன்று ஒரு நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, பழங்குடி மக்களின் குறைகளைக்கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ளது மாறாமலை. அடர்ந்தவனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளதால், மாறாமலை கிராமத்து மக்கள் வெளி உலகத்தோடு தொடர்புகொள்ளப்பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பரப்பை படகில் கடக்க வேண்டும். அல்லது தோவாளை தலுகாவில் உள்ள கீரிப்பாறை வரை சுமார் 7 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.காடுகளின் வழியே வரும் பாதைகள் மண் மற்றும் பாறைகள் நிறைந்த கரடுமுரடான பாதைகளாகவே உள்ளன.இதனால் அவசர மருத்துவத் தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் நேரடியாகக் கிராமங்களுக்குள் செல்ல முடியாது. மருத்துவமனைக்குசெல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து கார் மூலம் கீரிப்பாறைக்கு செல்லவேண்டிய அவலநிலையில் உள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

இப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனமண்டலத்திற்குள் வருவதால், புதிய தார்ச்சாலைகள் அமைப்பதற்குவனத்துறையின் கடுமையான விதிகளும் ஒப்புதல்களும் தடையாக உள்ளன. இருப்பினும், மக்கள் நடந்து செல்லும் பாதைகளைச் சீரமைக்கவும், 7 கிலோ மீட்டர்சாலை அமைக்கவும், மின்சார கேபிள் அல்லது சோலார் மின்சாரம் வழங்கநடவடிக்கை மேற்கொள்வதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.ஆய்வின் போது, கீரிப்பாறை, மாறாமலை, சப்பாத்துக்கு (தரைமட்ட பாலம்) பதிலாக உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்தும், சேதமடைந்த பாலமோர்சாலையை சீரமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், மின் கம்பங்கள் மீதுமரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளதையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து காரிமணியில் உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளிக்குச் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்துகுறைகளை கேட்டறிந்தார். அப்போது,கீரிப்பாறை வழியாக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை 4 எப் என்கிற வழித்தட பேருந்து வந்துகொண்டிருந்ததாகவும் அதை மீண்டும் இயக்க வேண்டும்எனவும் கோரிக்கை விடுத்தனர்.மலைப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை, மின்சாரம், பேருந்து வசதி மற்றும் மருத்துவவசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ உறுதியளித்தார்.