தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொன்மனை காயல்கரை பழங்குடி மக்களுக்கு குடிநீர், சாலை, மின்சார வசதிகள் செய்துதர ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ உறுதி

31 Oct 2026, 10:09 pm
பொன்மனை காயல்கரை பழங்குடி மக்களுக்கு குடிநீர், சாலை, மின்சார வசதிகள் செய்துதர  ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ உறுதி

பொன்மனை காயல்கரை பழங்குடி மக்களுக்கு குடிநீர், சாலை, மின்சார வசதிகள் செய்துதர ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ உறுதி

பத்மநாபபுரம், அக்.31-பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட பொன்மனை பேரூராட்சி, காயல்கரை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள்சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி சனியன்று நேரில்ஆய்வு மேற்கொண்டார்.

இங்கு மழைக்காலங்களில் பாதிக்கப்படும் பகுதிகளையும், சாலை வசதிகுறித்தும் ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.அப்போது அவர்கள், மழைக்காலங்களில் தண்ணீர் ஆள் உயரத்திற்கு வருவதால், இரண்டு புறங்களிலும் உள்ளதலா 10 குடும்பங்கள் அந்த இடத்தைகடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், பள்ளி குழந்தைகள் கூட செல்ல முடியாத சூழல் உருவாவதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும்,பெண்கள் தங்கள் பகுதியில் குடிநீர்வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடிநீர் வசதிக்காக புதிய கிணறு அமைத்து, பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருவதற்கான பணிகளை விரைவில் தொடங்குவதாக உறுதி அளித்தார். சாலைவசதியை மேம்படுத்தவும், ஓடையை கடக்க பாலம் அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசிநடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.