தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமாரபுரம் நெஞ்சுந்தி நகர் விளையாட்டு மைதானத்தை குடியிருப்பாக மாற்றக்கூடாது வட்டாட்சியர்களிடம் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வலியுறுத்தல்

16 Jul 2026, 9:42 pm
குமாரபுரம் நெஞ்சுந்தி நகர் விளையாட்டு  மைதானத்தை குடியிருப்பாக மாற்றக்கூடாது வட்டாட்சியர்களிடம் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வலியுறுத்தல்
<p><strong>குமாரபுரம் நெஞ்சுந்தி நகர் விளையாட்டு மைதானத்தை குடியிருப்பாக மாற்றக்கூடாது வட்டாட்சியர்களிடம் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வலியுறுத்தல்</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 16- குமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம் குமாரபுரம் பேரூராட்சி நெஞ்சுந்தி நகரில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்களுக்காக பயன் பட்டு வருகின்ற விளையாட்டு மைதா னத்தை குடியிருப்பாக மாற்றக்கூடாது என்று ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ தலை மையில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. நெஞ்சுந்தி கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பின் நடுவில் விளையாட்டு மைதானம் உள்ளது .தற்போது ஆதிதிராவிடர் துறை, இந்த விளையாட்டு மைதானத்தை இலவச குடிமனை பட்டாவாக கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். குடியிருப்பவர்களுக்கு வேறு எந்த இட வசதியும் இங்கு இல்லை .குடியிருப்ப வர்களின் குடும்ப நல விசேஷங்களுக்கும் இளைஞர்கள் விளையாடுவதற்கும் ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் யாருக்கும் குடியிருப்புக்கு பட்டா வழங்கக் கூடாது என்றும் ஆதிதிராவிடர் மக்கள் வேறு தனியார் இடங்களை தேவைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் மலைவிளை பாசி,வட்டாரத் தலைவர் ஜோசப்,செயலாளர் சிவமோகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.