காட்டாத்துறையில் 4 புதிய வகுப்பறை கட்டிடங்களை ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ திறந்துவைத்தார்
3 Nov 2026, 8:49 pm
<p><strong>காட்டாத்துறையில் 4 புதிய வகுப்பறை கட்டிடங்களை ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ திறந்துவைத்தார்</strong></p><p>நாகர்கோவில், நவ. 3-கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டாத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில், வங்கி நிதி உதவியுடன் (NABARD) ரூ.119 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 புதிய வகுப்பறைகளின் திறப்பு விழா நவம்பர் 3 செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பத்மநாப புரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி கலந்து கொண்டு புதிய வகுப்பறைக்கட்டிடத்தைத் திறந்துவைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர் சௌந்தரராஜன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் அனிதா மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர், ஊர் பொது மக்கள் எனப் பலரும்கலந்து கொண்டனர்.</p>
