முந்தய பக்கம்

காட்டாத்துறை அரசுப் பள்ளியில் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பங்கேற்பு

22 Sept 2026, 9:28 pm
காட்டாத்துறை அரசுப் பள்ளியில் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பங்கேற்பு

காட்டாத்துறை அரசுப் பள்ளியில் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பங்கேற்பு

காட்டாத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததுடன், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்தினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், மார்த்தாண்டம் பள்ளி துணை ஆய்வாளர் சங்கரலிங்கம், திருவட்டாறு வட்டார வளர்ச்சி அலுவலர் கே.அஜிதா, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடையால் அரசு மாதிரிப் பள்ளி

கடையால் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடையால் பேரூராட்சி தலைவர் ஜூலியட் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 14ஆவது வார்டு கவுன்சிலர் இராஜேந்திரன், தலைமை ஆசிரியர் பால்ராஜ், கல்வி மேலாண்மை குழு தலைவர் பென்சிலாள், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஸ்ரீகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளவங்கோடு தாலுகா வெள்ளாங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்பிரமணியம் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீகலா மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram