வேர்க்கிளம்பி பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட் சார்பில் கல்வி உதவி வழங்கினார் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ
29 Jun 2026, 8:57 pm
<p><strong>வேர்க்கிளம்பி பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட் சார்பில் கல்வி உதவி வழங்கினார் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ </strong></p><p>திருவட்டார், ஜூன் 29 - திருவட்டார் அருகே வேர்க்கிளம்பியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்டின் 7 ஆம் கட்ட கல்வி உதவி வழங்கும் விழா வேர்க்கிளம்பி யில் டிரஸ்ட் தலைவர் எஸ். காட்சே தலைமை யில் நடந்தது. பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஏழை, எளியோருக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இலவச கணினி மையம், இசவச டியூசன் சென்டர், காசநோயால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வருகிறது இந்நிறுவனம். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இலவச நீட் பயிற்சி உட்பட ஆம்புலன்ஸ் வசதியும் செய்து வருகிறது. விழாவுக்கு ஒருங்கிணைப்பாளர் பி.எட். வின் ராஜ் வரவேற்றார். ஜெயசிங், பேபி, ஜெபா ன்சிலி, கிரி , சட்ட ஆலோசகர் வி.எஸ். நந்த குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் எம்.சோபிதராஜ் அறிக்கை சமர்பித்தார். பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர்.செல்லசுவாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி துவங்கி வைத்தார். வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார், துணைத்தலைவர் துரைராஜ் மனுவேல், பசித்தோர்க்கு உணவு அறக்கட்டளை தலை வர் கருங்கல் ஜார்ஜ், பயிற்சியாளர் சேவியர் சுரேஷ்பாபு, செருப்பாலூர் கிருபா சேரிட்டப்பிள் டிரஸ் நிறுவனர் ஆர்.பிராங்கிளின், திரு வட்டார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் எஸ். சிவசங்கர், குழித்துறை மறைமாவட்ட அனை த்து பணிக் குழுக்களின் இயக்குநர் பங்குப் பணியாளர் என்.மார்டின் ஆகியோர் பேசினர். நிகழ்வில் டிரஸ்டின் இலவச டியூசன் மையத்தில் பயின்று 10 ஆம் வகுப்பில் 481 மதிப்பெண் பெற்ற தனிகா என்ற மாணவிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. டிரஸ்ட் பொரு ளாளர் சுஜின் லோகிதாஸ் நன்றி கூறினார்.</p>
