எம்கேபி. நகர் பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் திறப்பு
7 Mar 2026, 2:36 pm
<p><strong>எம்கேபி. நகர் பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் திறப்பு</strong></p>
<p>சென்னை, மார்ச் 7- எம்.கே.பி. நகரில் சிறப்பு குழந்தைக ளுக்கான விளையாட்டுத் திடல் திறந்து வைக்கப்பட்டது. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 37ஆவது வார்டு பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கு என தனி விளையாட்டுத் திடல் வேண்டும் என அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் ஜெ.டில்லி பாபுவுக்கு கோரிக்கை விடுத்த னர். அதனடிப்படையில் சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் 3ஆவது குறுக்குத் தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் ஒரு பகுதியை மன வளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகள் மட்டும் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டது. இதையொட்டி அந்தப் பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 14.6 லட்சம் மதிப்பீட்டில் இந்த சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் கட்டி முடிக்கப்பட்டு குழந்தைகளின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதனை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் பானுமதி மற்றும் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரமணகுமார், தண்டையார்பேட்டை 4ஆவது மண்டல உதவி செயற்பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று 200 வார்டுகளிலும் சிறப்பு குழந்தைகளுக்கு தனி விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.</p>
