முந்தய பக்கம்

அறிவுலகத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்!

5 Nov 2026, 12:32 am
அறிவுலகத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்!
<p><strong>அறிவுலகத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்!</strong></p><p>கோவை, நவ.4-இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டு, தங்களது அறிவுத்திறனைவளர்த்துக்கொள்ளவேண்டும்என்று திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் இணைந்து மு.க.ஸ்டாலின் புதனன்று பார்வையிட்டார். அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு தளங்களைபார்வையிட்ட அவரை, அங்கிருந்த பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கம், திராவிடம் மற்றும் பெரியாரின் உணர்வுகள், லட்சியங்களை இளைஞர்களும் மாணவர்களும் அறிந்துகொள்ள இங்கு வந்து பார்வையிட வேண்டும். திமுக ஆட்சியில்அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர்நூலகம் உருவாக்கப்பட்டன. நெல்லையில்காயிதே மில்லத், திருச்சியில் காமராஜர்பெயரிலும் நூலகப் பணிகள் நடைபெறுகின்றன. பெரியார் அறிவுலகத்தின் 99.75% பணிகள் நிறைவடைந்ததால் இத்திட்டம் தப்பியது; பாதியில்நின்றிருந்தால் இந்தஅரசு மூடுவிழா நடத்தியிருக்கும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram