மே 31 - க்குள் கருத்து பதிவிடுங்கள் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
28 May 2026, 9:47 pm
<p><strong>மே 31 - க்குள் கருத்து பதிவிடுங்கள் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்</strong> </p><p>சென்னை, மே 28 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் மற்றும் இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் கழக உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளத்தில் இதுவரை 4.60 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மே 31ஆம் நாளுக்குள் அனைவரும் தங்கள் கருத்துகளை www.udanpirapinkural.in இணையதளம் வழி பதிவிடுமாறு மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார். கழக மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இச்செய்தியை தங்கள் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் வாட்ஸாப் குழுக்கள் வழியாக பரப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
