முந்தய பக்கம்

ஏப். 2இல் தேர்தல் பிரச்சாரத்தை  துவங்குகிறார்  மு.க. ஸ்டாலின்!

26 Mar 2026, 2:46 pm
ஏப். 2இல் தேர்தல் பிரச்சாரத்தை  துவங்குகிறார்  மு.க. ஸ்டாலின்!
<p><strong>ஏப். 2இல் தேர்தல் பிரச்சாரத்தை &nbsp;துவங்குகிறார் &nbsp;மு.க. ஸ்டாலின்!</strong></p> <p>சென்னை, மார்ச் 26 - சட்டமன்றதேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு மான தேர்தல் &nbsp;பரப்புரையை முதலமைச்சரும் திமுக தலை வருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2ந் தேதி திருவாரூரில் இருந்து துவங்குகிறார். ஏப்ரல் 3 அன்று காலை ஜெயங்கொண்டத்திலும், மாலை திருவெறும்பூரிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற் கிறார். திருச்சி மாநகரப் பகுதியில் வாகனப் பேரணியும் மேற்கொள்கிறார். ஏப்ரல் 4 அன்று காலை கரூரிலும், மாலை திருப்பூரிலும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஏப்ரல் 5 காலை நாகர்கோவி லிலும் மாலை திருநெல்வேலி யிலும் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 6 அன்று &nbsp;மாலையில் திருவள்ளூர் பொதுக்கூட்டத்தி லும், ஏப்ரல் 7 காலை மேட்டுப் பாளையத்தில் பொதுக்கூட்டத்தி லும், மாலையில் சூலூரில் பொதுக்கூட்டம் மற்றும் வாக னப் பேரணியிலும் பங்கேற் கிறார். ஏப்ரல் 8 அன்று பரமத்தி வேலூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், ஏப்ரல் 9 அன்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியிலும், ஏப்ரல் 10 அன்று வேலூர் மற்றும் ஆரணி மாவட்டங்களிலும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். கொளத்தூரில் நிறைவு ஏப்ரல் 11அன்று சிவகங்கை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரப் புரை மேற்கொள்கிறார். ஏப்ரல் 21 அன்று காலை ஸ்ரீபெரும் புத்தூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், மாலையில் கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவுசெய்கிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram