கொளத்தூர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
5 May 2026, 9:59 pm

கொளத்தூர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

சென்னை, மே 5 - மூன்று முறை வெற்றி பெற்று, சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க் கட்சித் தலைவராகவும், முதலமைச்ச ராகவும் கொளத்தூர் சட்ட மன்றத் தொகுதியைப் பிரதிநிதித்து வப்படுத்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நான்காவது முறையாக போட்டியிட்ட நிலையில், எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தார்.

தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு விடம் 8,795 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றியை இழந்தார். வி.எஸ்.பாபு, திமுக-வின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். திமுக-வால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதி முக-வுக்கு சென்ற அவர், அங்கிருந்து தவெக-விற்கு தாவிய நிலையில், அவ ரிடம் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்தது, கட்சியினரை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எனினும் தோல்வியில் சிறிதும் தளராத மு.க. ஸ்டாலின், தனக்கு வாக்களித்த 74,000 வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கொளத்தூர் தொகுதிக்கு வருகை தந்தார்.

திறந்தவெளி வாக னத்தில் வீதி, வீதியாக இன்முகத்து டன் வலம் வந்த மு.க. ஸ்டாலினை வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கா னோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

மாடி வீடுகளில் நின்றவர்களைப் பார்த்தும், கை அசைத்தும் மு.க. ஸ்டா லின் நன்றி தெரிவித்தார்.

உணர்ச்சிப் பெருக்குடன் கண்ணீர் மல்கிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறினார்.

இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி யின் போது கொளத்தூர் தொகுதி முழு வதும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்து கொடுத்த நல திட்டங்களை நினைவு கூர்ந்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் முழக்கங்கள் எழுப்பினர். மு.க.ஸ்டாலினுடன் வந்திருந்த முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவும் தொண்டர்களின் கண்ணீரைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.

தொண்டர்கள் அழுவதைப் பார்த்த ஸ்டாலின் அவர்களை அமைதிப்படுத்தினார்.

தோல்வியடைந்தாலும் போட்டி யிட்ட தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என கட்சியின ருக்கு அறிவுறுத்தியிருந்த ஸ்டாலின், முதல் ஆளாகவே அதை நிறைவேற்றி னார்.