தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘தேர்தலில் புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி’ தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!

14 May 2026, 9:41 pm
‘தேர்தலில் புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி’ தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!

‘தேர்தலில் புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி’ தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு சென்னை, மே 14 - சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு, தலைவர் என்ற முறையில், தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவா லயத்தில் வியாழக்கிழமை (மே 14) அன்று நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியிருப்பதாவது: நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர, கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்கு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு தான். இப்போது நம்மைப் பார்க்கும் அனைவருமே, ஏன் சமூகவலை தளங்களிலும் கூட, ‘எப்படியும் திமுக தான் ஜெயிக்கும்னு நினைச்சோம்.

அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்’-னு புலம்புறாங்க. அதுமட்டுமில்ல, இப்படி ஒரு கட்சிக்கு வோட்டு போட்டு – ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே-னு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்கிறேன்.

இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். நம்ம உழைப்புக்கு கிடைத்த சான்று! ஆனா, அது வெற்றியாக மாறாமல் போய் விட்டது. பொதுவாழ்க்கைக்கு வந்தா வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

மேடு பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேறு யாரையும் விட நமக்குத்தான் அதிகம். கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையாக உழைத்தேன்.

உங்களையும் உழைக்க வைத்தேன். என் சக்திக்கு மீறியும் உழைத்தேன். உங்களையும் ஓய்வே இல்லாமல் உழைக்க வைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்திருக்கிறோம்.

கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியாக நம்ம ஆட்சி இருந்தது. இது மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் நாம் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதற்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பவில்லை. திமுகவின் தலைவர் என்ற முறையில், நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதுதான் நிதர்சனம்.

வெற்றி கிடைத்தால், அதன் பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்வது தான் நியாயம். நீங்களும் இந்த தோல்விக்காக, அடுத்தவர் மேல் பழி போடாதீர்கள்.

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி.

சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ அல்ல. பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் அதைச் சொல்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது. தமிழ்நாட்டு மக்களை இதில் இருந்து, எப்படி மீட்டெடுக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம். நாம் பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரர்கள்.

நமது இந்த தோல்வி தற்காலிகம்தான். வெற்றியை நோக்கி பயணிப்போம். திட்டமிடுவோம். தீவிரமாக உழைப்போம். மீண்டு வருவோம்! மீண்டும் வெற்றி பெறுவோம்.” இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யவும் தொண்டர்களின் கருத்துகளை சேகரிக்கவும் தனி இணையதளம் தொடங்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கட்சி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.