முந்தய பக்கம்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

5 May 2026, 11:55 am
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகின. நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகியது. அதில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 தொகுதிகளைக் கைப்பற்றியது. எனினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சியால் பெற முடியாத நிலையால், அக்கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின். ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றார்.

Share
FacebookXWhatsAppTelegram