‘கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்!’ திமுக-வினருக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
22 May 2026, 8:33 pm

‘கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்!’ திமுக-வினருக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, மே 22 - திமுக தலை மை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள், தவெக தலைமையிலான அமைச்சரவையில் இணைந்ததை அடுத்து, அந்தக் கட்சிகளின் நிலைபாட்டை, திமுக முன்னணி தலைவர்கள் சிலர், சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனை குறிப்பிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமது சமூகவலைதளப் பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மாண்புமிகு அமைச்சர் களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு அவர்களுக்கும், ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!” என தெரிவித்திருக்கும் மு.க. ஸ்டாலின், “தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு.

எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பது தான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்” என்று கூறியுள்ளார்.

“பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம்.

அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.