தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஞானேஷ் குமாரைப் பதவி நீக்க வேண்டும்! குடியரசுத் தலைவரிடம் மு.க. ஸ்டாலின் மனு

28 Oct 2026, 9:54 pm
ஞானேஷ் குமாரைப் பதவி நீக்க வேண்டும்! குடியரசுத் தலைவரிடம் மு.க. ஸ்டாலின் மனு

ஞானேஷ் குமாரைப் பதவி நீக்க வேண்டும்! குடியரசுத் தலைவரிடம் மு.க. ஸ்டாலின் மனு

சென்னை, அக். 28 -தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு என்றும், பெரும்பான்மை அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்; ஆனால், மற்ற இரு ஆணை

யர்களின் ஆட்சேபனைகளை மீறித் தலைமை தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் செயல்பட்டிருப்பதாக மனுவில் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு (SIR) பிறகு, தமிழகத்தில் 2025 டிசம்பர் வரைவுப் பட்டியலில் 97.37

லட்சம் வாக்காளர்களும், 2026 பிப்ரவரி இறுதிப் பட்டியலில் 74.07 லட்சம் வாக்காளர்களும் குறைந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டு அவர், முறையான அறிவிப்பு, விசாரணையின்றி நீண்டகால வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிக வாக்காளர் நீக்கங்கள் நடைபெற்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்றதையும், கொளத்தூரில் வாக்காளர் நீக்கங்களால் தனது தேர்தல் முடிவு பாதிக்கப்பட்டதையும்ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.தலைமை ஆணையரைப் பதவிநீக்கம் செய்தல், SIR-ஐ ரத்து செய்தல், வாக்காளர் நீக்கங்கள் குறித்துஉச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறுதல், தேர்தல் மென்பொருள்களைத் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துதல், வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்புதல் அல்லது விவிபேட்சீட்டுகளை முழுமையாக எண்ணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மு.க. ஸ்டாலின் முன்வைத்துஉள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.