தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘நான் முதல்வன்’ திட்ட சாதனைகளை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியாது! மு.க.ஸ்டாலின் உறுதி

21 Jun 2026, 1:16 am
‘நான் முதல்வன்’ திட்ட சாதனைகளை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியாது! மு.க.ஸ்டாலின் உறுதி
<p><strong>‘நான் முதல்வன்’ திட்ட சாதனைகளை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியாது! மு.க.ஸ்டாலின் உறுதி</strong></p><p>சென்னை, ஜூன் 20 - ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதி காரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தின் பெயரை மாற்றலாம், பதிவுகளை நீக்கலாம்; ஆனால், அந்தத் திட்டத்தின் சாதனைகளையும் மக்களின் நன்றியு ணர்வையும் அவர்களின் மனதில் இருந்து நீக்க முடியாது என்று முன்னாள் முதல மைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 5 ஆண்டுகளாக தன் ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், படிக்க விரும்பும் இளை ஞர்களுக்கு உதவும் நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கியதாகவும் கூறியுள்ளார். இத்திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். 2022-இல் திமுக ஆட்சியில் தொடங்கப் பட்ட ‘நான் முதல்வன்’ திட்டம், அரசு பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் திறன்களை அடையாளம் கண்டு வளர்ப்பதையும், உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பயிற்சி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டி ருந்தது. தற்போது அமைந்துள்ள புதிய அரசு இத்திட்டத்தின் எக்ஸ் தளப் பக்கத்தின் பெயரை ‘திறன் தமிழ்நாடு கார்ப்பரேஷன்’ என மாற்றியிருப்பதுடன், மே 15 ஆம் தேதிக்கு முந்தைய அனைத்து பதிவுகளை யும் நீக்கியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.