தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொகுதி மறுவரையறையில் சமரசம் இல்லை! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

2 hours before
தொகுதி மறுவரையறையில் சமரசம் இல்லை! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை குறித்த நிலைப்பாட்டில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு 100 நாட்கள் கடந்த நிலையிலும் மழைக்கால கூட்டத் தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், நவ. 30 ஆம் தேதி மக்களவையும் டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவையும் சிறப்பு அமர்வை கூட்ட ஒன்றிய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “ஒன்றிய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது. தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்த நிலைப்பாட்டில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:

• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!

• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!

எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!

ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.