தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக பீனிக்ஸ் பறவை; மீண்டும் ஆட்சிக்கு வருவோம்! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு

18 May 2026, 10:39 pm
திமுக பீனிக்ஸ் பறவை;  மீண்டும் ஆட்சிக்கு வருவோம்! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு

திமுக பீனிக்ஸ் பறவை; மீண்டும் ஆட்சிக்கு வருவோம்! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர், மே 18 - தஞ்சையில் நடைபெற்ற பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தோல்வி அடைந்த போதெல்லாம் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து வந்திருப்பது தான் திமுக-வின் வரலாறு என்றும், அதன் அடிப்படையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் தோல்விகளைக் கண்டு திமுக ஒருபோதும் சிதறாது; அதனால் யாரும் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் சமமாகக் கருதி தொடர்ந்து பாடுபடக்கூடிய தொண்டர்களைக் கொண்டதுதான் திமுக என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றார்.

திமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் தற்போதைய அரசும் செயல்படுத்தி வருகிறது; திமுகவின் சாதனைகளை யாராலும் மாற்றிவிட முடியாது; திமுக-வின் திட்டங்கள் மக்கள் மத்தியில் இருக்கும் வரை நாம்தான் ஆட்சி செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணியை திமுக ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும், தேர்தல் தோல்வி குறித்து அனைவரிடமும் கருத்துகளைக் கேட்டு வருவதாகவும் தெரிவித்த மு.க. ஸ்டாலின், நாம் எல்லாப் பணிகளையும் செய்தும் தோல்வியடைந்தோம்; ஆனால், எதிரணியினர் எந்தப் பணியையும் செய்யாமல் வெற்றி பெற்றுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார்.

சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டுமே தவெக ஆட்சிக்கு வந்துள்ளதாக விமர்சித்த அவர், சிறு குழந்தைகளைத் தேர்தல் பரப்புரை செய்ய வைத்து வெற்றி பெற்றுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

திமுகவின் கதை முடிந்துவிட்டது என இன எதிரிகள் நினைக்கின்றனர் என்றும், ஆனால் தோல்வி அடைந்தபோதெல்லாம் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து வந்துள்ளது திமுகவின் வரலாறு என்றும், அதன் அடிப்படையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.