முந்தய பக்கம்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

8 May 2026, 12:15 pm
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அன்பில் மகேஷ் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்! கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram