தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவது உறுதி

11 Apr 2026, 5:30 am
மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவது உறுதி

மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவது உறுதி

மறைமலைநகர், ஏப். 10: “முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் கடந்த ஐந்தாண்டுகளில் செய்துள்ள மகத்தான பணிகளை இந்தியாவே கவனித்து வரு கிறது; அவர் மீண்டும் முதல மைச்சராகப் பதவியேற்பது உறுதி” என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார். மறைமலைநகரில் வியாழன் இரவு நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னி லையில் அவர் உரையாற்றினார். பாஜகவின் பொறாமையும் சதிக் கவலைகளும் தமிழக அரசின் சாதனை களைச் சகித்துக்கொள்ள முடியா மல், பொறாமையினால் பாஜக பல்வேறு அரசியல் தாக்குதல் களை முன்னெடுத்து வரு கிறது. சில சதிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அவை ஒருபோதும் வெற்றி பெறாது. மக்கள் ஆதரவு கொண்ட இந்தக் கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடி யாது என டி.கே. சிவக்குமார் வலி யுறுத்தினார். மேலும், காங்கிரஸ் கட்சி யாருடன் உள்ளது என்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான காங்கிரஸ், மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியுடன் முழுமையாக இருப்பதாகத் தெரிவித்தார். விவசாயத்தைப் போன்றது அரசியல் அரசியலை விவசாயத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், “நிலத்தைத் தயார் செய்வது முதல் அறுவடை வரை திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அதுபோலவே திமுக வும் காங்கிரசும் பல பத்தாண்டு களாகப் பேணி வரும் வலு வான உறவை எந்தப் புதிய அரசி யல் முயற்சியாலும் உடைக்க முடி யாது” என்றார். கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றியது போலவே, தமிழகத்திலும் மு.க. ஸ்டாலின் தனது வாக்குறுதிகள் அனைத்தை யும் நிறைவேற்றி வருவதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார். விலைவாசி உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியிலும் மக்க ளுக்கான நலத்திட்டங்களைத் தங்குதடையின்றிச் செயல்படுத்தி வரும் மு.க. ஸ்டாலின், மீண்டும் பெருவாரியான வாக்கு வித்தி யாசத்தில் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என்று அவர் தனது உரையில் உறுதி யாகத் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.