இந்திய மாலுமி விவேக்கை கண்டறிய ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் இந்திய மாலுமிகள் சங்கம் கோரிக்கை
15 Jul 2026, 1:40 am

இந்திய மாலுமி விவேக்கை கண்டறிய ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் இந்திய மாலுமிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூலை 14- இந்திய மாலுமி விவேக்கின் இருப்பிடத்தை கண்டறிய ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தலை யிட வேண்டும் என்று இந்திய மாலுமி கள் சங்கம் (ஃபார்வர்டு சீமென்ஸ் யூனியன் ஆப் இந்தியா) கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் துணை த்தலைவர் டி.நரேந்திரராவ் செவ்வா யன்று (ஜூலை 14) செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரத்தை சேர்ந்த மாலுமி ஜெ.விவேக் ஹெர்ம்ஸ் ஷிப் மேனேஜ் மென்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் வணிகக் கப்பலான எம்.வி.பெர்சிஸ் டென்சியில் பணிக்கு சேர்ந்தார்.

மார்ச் 27ந் தேதி வரை தனது குடும்பத்தின ருடன் தொடர்ந்து தொடர்பில் இருந் துள்ளார்.

அதன்பிறகு செல்போன் செயல்படவில்லை. மே 6 அன்று பணியை முடித்து கப்பலில் இருந்து விவேக் இறங்கி விட்ட தாக அவரது குடும்பத்தினரிடம் நிறுவனம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

மே 7 அன்று தோஹா-மஸ்கட், மே 8 அன்று மஸ்கட்- மும்பை நோக்கி விமானத்தில் செல்லும் பயண திட்டத்தின்படி இ-டிக்கெட்டை நிறுவனம் வழங்கியதாக கூறப்படு கிறது.

இந்த பயணத் திட்டப்படி விவேக் விமானங்களில் பயணித்தாரா, இந்தியா வந்து சேர்ந்தாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை கப்பல் நிறுவனம் வழங்க மறுக்கிறது. இரண்டு மாதங்களாகியும் மாலுமி அவர் வீடு திரும்பவில்லை; தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இதனால் குடும்பத்தினரிடையே கடும் அச்சமும் கவலையும் நிலவுகிறது

. இது தொடர்பாக உள்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், கப்பல்துறை அதிகாரிகள், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளோம். விழுப்புரம் மாவட்ட த்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இருப்பினும் முன்னேற் றம் இல்லாமல் உள்ளது. இந்த விவ காரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு மாலுமியை கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பாக, விவேக் பயணம் மேற் கொண்டதற்கான போர்டிங் பாஸ், விமானப் பதிவு, பயணிகள் பட்டியல், குடிநுழைவு பதிவுகள் உள்ளிட்ட ஆவ ணங்களை ஹெர்ம்ஸ் ஷிப் மேனேஜ் மென்ட் நிறுவனம் வழங்க அரசு உத்தர விட வேண்டும்.

விவேக்கின் பயணத்தை முழுமையாக சரிபார்க்க வேண்டும். கத்தார், ஓமன் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க வேண்டும். அனைத்து அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் விரிவான விசா ரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது விவேக்கின் மனைவி வி.சினேகா, போர்ட் அண்ட் டாக் எம்பிளாயீஸ் யூனியன் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.