தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காணாமல் போகும் குழந்தைகள்: தடுக்கத் தவறாதீர் அரசே! - மு. மோகனவள்ளி

2 Nov 2026, 9:28 pm
காணாமல் போகும் குழந்தைகள்: தடுக்கத் தவறாதீர் அரசே! - மு. மோகனவள்ளி

காணாமல் போகும் குழந்தைகள்: தடுக்கத் தவறாதீர் அரசே! - மு. மோகனவள்ளி

ஒரு குழந்தை காணாமல் போவது அதன் பெற்றோருக்கு மட்டுமான துயரம் அல்ல; சமூகக்கட்டமைப்புகளின் செயல்பாடு குறித்தே பெரும் கேள்வி எழுப்பும் பிரச்சனை. ஆண், பெண் என்ற வேறுபாடின்றிக் குழந்தைகள் மாயமாகின்றனர். பள்ளிக்குச் சென்ற குழந்தை வீடு திரும்பாதது,பெற்றோரிடையேயானசண்டை, குடும்பப் பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறுவது, வேலைதேடிச் செல்வது, கட்டாயக் கடத்தல், கல்விச் சுமையின் மன அழுத்தம், பெண் குழந்தைகளைக் குறிவைக்கும்பாலியல் சுரண்டல், இணைய ஏமாற்றுஎனப் பல வழிகளில் இது நிகழ்கிறது. வறுமை, கல்வி ஏற்றத்தாழ்வு, சமூகப் பாதுகாப்புக் குறைபாடு ஆகியவையும்இதன் பின்னணியில் உள்ளன.

தொடரும் சம்பவங்கள்

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டகுழந்தைகள் காணாமல் போயுள்ளனர். செப்டம்பரில் காணாமல் போன16 குழந்தைகள் கண்டறியப்பட்டதாகத் தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்புப் படை தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன 7 வயதுச் சிறுமி இன்னும்கண்டறியப்படாததால், வழக்கு சிபிசிஐடிக்குமாற்றப்பட்டுள்ளது. திருவண்ணா மலையில் 3 பள்ளி மாணவிகள், கிருஷ்ணகிரியில் 12 வயது மாணவன்,ராணிப்பேட்டையில் ஒரு வயதுப் பெண் குழந்தை என நாள்தோறும் குழந்தைகள் மாயமாகின்றனர்.

மௌனத்தின் பின்னால்

பெற்றோரிடையே தொடர் சண்டை, பிரிவு, அன்பும் கவனிப்பும் கிடைக்காமை, பள்ளிச் சிக்கல்கள், தேர்வு அழுத்தம், விளையாட நேரமின்மை,கைப்பேசியில் மூழ்குதல், தூக்கமின்மை போன்றவைகுழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கின்றன. தங்கள் சிக்கல்களைப் பெற்றோரிடம் சொல்லப் பயந்து தவிக்கும்குழந்தைகளை மோசடியாளர்கள் கண்காணித்துச் சுரண்டுகின்றனர். குழந்தையின் மனநிலையை அது வாழும் சமூகச் சூழலிலிருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது.

பாதுகாப்பற்ற பொருளாதாரச் சூழல்

வேலை, கல்விக்காகக் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயரும் குடும்பங்கள் நிலையான முகவரியோ, குழந்தைப் பராமரிப்பு வசதியோ, அக்கம்பக்கத்தின் ஆதரவோஇன்றித் தவிக்கின்றன. வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களால் இடம்பெயரும் குடும்பங்களின் குழந்தைகள் கல்வியை இழக்கின்றனர். ஒற்றைப் பெற்றோர் அல்லது முதிய தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். போதிய தெருவிளக்குகள் இல்லாத இடங்கள், கண்காணிப்பற்ற பேருந்துநிலை யங்கள், விளையாட்டிடப் பற்றாக்குறைஆகியவையும் ஆபத்தை அதிகரிக் கின்றன. இணையத்தில் போலி அடையாளத்துடன் பழகுதல், பரிசுப் பொருள்ஆசை காட்டுதல், இணைய மிரட்டல்போன்றவையும் குழந்தைகளை ஆபத்தில் தள்ளுகின்றன. வறுமை யால் கல்வியை இடைநிறுத்திக் குழந்தைத்தொழிலாளர் ஆவது அவர்களின் வாழ்வையே ஆபத்தாக்குகிறது. ஏழைக் குடும்பங்களில் மட்டுமே குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்பது தவறு; வசதியான குடும்பங்களின் குழந்தைகளும் இத்தகைய மன நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர்.

வேறுபட்ட ஆபத்துகள், சமமான உரிமைகள்

பெண் குழந்தைகள் பாலியல் வன்முறை, கட்டாயத் திருமணம், பாலினப் பாகுபாடு ஆகிய ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். குடும்பக் கௌரவம் கருதி அவர்களின் பிரச்சனை களை மறைப்பது மேலும் ஆபத்தா னது. ஆண் குழந்தைகள் அழக்கூடாது, பயத்தைக் காட்டக்கூடாது, உதவி கேட்கக்கூடாது என்ற சமூகக்கருத்துகள் அவர்களின் பிரச்சனை களை மூடிமறைக்கின்றன. பாலி னத்தைவிடக் குழந்தையின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்குமே முன்னுரிமை தர வேண்டும்.

உடனடியாகச் செய்ய வேண்டியவை

குழந்தை காணாமல் போனால், நாமே தேடிப் பார்த்துவிட்டுப் பிறகு புகார்செய்யலாம் என்று காத்திருப்பது ஆபத்தானது. உடனே காவல்துறையை அணுகி, அவசர உதவி எண் 112இல் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள்துன்புறுத்தலுக்கோ பாலியல் தொந்தரவுக்கோ உள்ளாகும்போது குழந்தைகள் உதவி எண் 1098இல் புகார் செய்யலாம். ஒன்றிய அரசின் 2026 அறிவிப்பின்படி TrackChild, Khoya-Paya சேவைகள்‘மிஷன் வாத்சல்யா’ (Mission Vatsalya) இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. காணாமல் போன,கண்டறியப்பட்ட குழந்தைகள் குறித்த தகவல்களை இதில் பார்க்க வும் தெரிவிக்கவும் முடியும்.

அரசும் சமூகமும் செய்ய வேண்டியவை

1. பள்ளி வருகையில் மாற்றம் தெரிந்தால் உடனே பெற்றோரைத் தொடர்புகொள்ள வேண்டும்; குழந்தையை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்த வேண்டும்.

2.பாதுகாப்பான, பாதுகாப்பற்ற தொடுதல், அறிமுகமில்லாதவருடன் செல்வதன் ஆபத்து குறித்து வயதுக்கேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பள்ளிகளில் ஆலோசனைச் சேவை வேண்டும்.

3.ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட கூட்ட இடங்களில் கண்காணிப்பை வலுப்படுத்தி, குழந்தைகளுக்கானதனிக் காவல் படை அமைத்து, கண்டறியப்படாத வழக்குகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

4.காணாமல் போன குழந்தைகள் குறித்த மாவட்ட வாரியான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவேண்டும்.

5.இலவசக் கல்வி, குழந்தைப் பராமரிப்பு, சமூகப் பாதுகாப்பு, குடும்பங்களுக்கான ஆதரவு விரிவுபடுத்தப் பட்டு, குழந்தைத் தொழிலாளர் முறையும் மோசடிகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

6.குறும்படங்கள் மூலம் பள்ளிகளி லும் பொது இடங்களிலும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோர் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி மனம்விட்டுப் பேசினால், அவர்களின் சிக்கல்களை முன்கூட்டியே அறியலாம்; மனநெருக்கடியும் குறையும். குழந்தைப்பாதுகாப்பு என்பது தனிப்பட்ட குடும்பத்தின் பிரச்சனை மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதரின் பாதுகாப்பு உரிமையோடும் இணைந்தது. குழந்தைகளேசமுதாயத்தின் தூண்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.