தவறவிட்ட 18 பவுன் நகைகள் மீட்பு: காவல்துறையினருக்குப் பாராட்டு
2 Dec 2025, 4:11 pm
<p><strong>தவறவிட்ட 18 பவுன் நகைகள் மீட்பு: காவல்துறையினருக்குப் பாராட்டு</strong></p>
<p>விழுப்புரம், டிச. 1- திண்டிவனம் அருகே டீக்கடையில் தம்பதிகள் தவறவிட்ட 18 சவரன் தங்க நகைகள் மற்றும் லேப்டாப்பை நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தாம்பரம், லட்சுமிபுரத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பவரின் மனைவி பிரசாந்தி (30), திருவண்ணாமலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் டீக்கடையில் தனது கைப்பையை மறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதில் 18 சவரன் தங்க நகை மற்றும் லேப்டாப் ஆகியவை இருந்ததாக ரோசணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், நெடுஞ்சாலை ரோந்து எண் -1 இல் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் மாணிக்கவாசகர் மற்றும் தலைமை காவலர் வேல்முருகன் ஆகியோர் துரிதமாகச் செயல்பட்டு பையை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினருக்கு மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.</p>
