ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
23 Sept 2026, 8:29 pm

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

வெள்ளி வென்றார் மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு

மினி ஒலிம்பிக் என அழைக்கப் படும் ஆசிய விளையாட்டுப் போட்டித்தொடரின் 20ஆவது சீசன், ஜப்பான் நாட்டின் ஐச்சி - நகோயா நகரில் சனியன்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து பதக்கப் போட்டிகள் ஞாயிறன்று தொடங்கின.

இந்நிலையில், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5ஆவது நாளான புதனன்று நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்க

னை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

வடகொரியாவின் ரி சுகாங் மொத்தமாக 215 கிலோ (ஸ்னாட்ச்: 94 கிலோ, கிளீன் & ஜெர்க்: 121 கிலோ) எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.மணிப்பூர் மாநிலத்தின் மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் பிரிவில் 111 கிலோஎன மொத்தமாக 198 கிலோ எடையைத் தூக்கி 2ஆம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்தோனேசியாவின் விஜயனா மொத்தமாக 191 கிலோ (ஸ்னாட்ச்: 88 கிலோ, கிளீன் & ஜெர்க்: 103 கிலோ)எடையைத் தூக்கி 3ஆம் இடத்துடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

துப்பாக்கிச்சுடுதல்இந்திய ஆடவர், மகளிர் அணிக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் ஸ்கிட் பிரிவில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மகேஸ்வரி, தலிவால், ரைசா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 331 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பிடித்தது. 357புள்ளிகளுடன் சீன அணி தங்கப்பதக்கமும், கஜகஸ்தான் அணி 336 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றன. குறிப்பாக இந்திய மகளிர் அணி இந்த பிரிவின் இறுதி சுற்றில் தோல்வியை சந்தித்து இருக்கும். ஆனால் கடைசி 2வாய்ப்புகளில் நல்ல புள்ளி குவிப்பால் வெண்கலம் வென்றது. அதே போல ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் ஸ்கிட்பிரிவிலும் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. கில், ஆனந்த், அகமத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி346 புள்ளிகளுடன் வெண்கலமும், கத்தார் அணி 358 புள்ளிகளுடன் தங்கமும், 348 புள்ளிகளுடன்வெள்ளிப்பதக்கமும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் பேட்மிண்டன் அணிப் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் சீனாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. எனினும் அரையிறுதிக்கு தகுதி பெற்றமையாமல் இந்திய அணி 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டியின் அணிப் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

சாப்ட் டென்னிசில் இந்தியாவிற்கு வெண்கலம்

ஆடவர் சாப்ட் டென்னிஸ் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் மீனா ஜே, ஜப்பானின் குரோஷாகாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-2 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் மீனா ஜே போராடி தோல்வியடைந்தார். எனினும் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய வீரர் மீனா ஜே வெண்கலப்பதக்கம் வென்றார்.