தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கருத்தரங்கம்

1 hour before
சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கருத்தரங்கம்

சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கருத்தரங்கம்

கோவை, ஜூலை 31-ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து, கோவையில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துக்களை கபளீகரம் செய்ய முனையும் ஒன்றியபாஜக அரசின் சட்டத்தை கண்டித்தும் மற்றும்வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டம்2026யை கண்டித்தும் சிறப்பு கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது. கோவை ரத்தினபுரி மினி ஹாலில்தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.ஜெரோம் ரோட்ரிக்ஸ்தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் என்.ஆர்.முருகேசன், ஜி.குழந்தைராஜ், ஜேய் மேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஏ.சாதிக் பாட்ஷா வரவேற்றார். இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் பி.செந்தில்குமார் பேசுகையில், ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருக்கிற வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டம் என்பது, முழுக்கமுழுக்க இந்திய நாட்டினுடைய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கக்கூடியஅடிப்படை உரிமைகளுக்கு முரணாக அமைந்துள்ளது. ஏற்கனவே பலமுறை இந்த சட்டம்திருத்தப்பட்டிருந்தாலும் கூட, சமீபத்தில் முன்மொழியப்பட்டிருக்கக்கூடிய இந்த சட்டத் திருத்தத்தில் ஜனநாயக உரிமையை பறிக்கிற, குறிப்பாக கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்கிறது. ஒன்றிய அரசு நினைத்தால் எந்தவொரு நிறுவனத்தையும், அவர்கள் கையகப்படுத்தலாம் என்கிற முறையில் தான் இந்த சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது,என்றார். இந்நிகழ்வில், மாநில துணைத்தலைவர் ப.மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், துணைத்தலைவர் டி.ஏ.சலீம் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.