தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

1 Jun 2026, 11:42 pm
இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்
<p><strong>இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, ஜூன் 1- சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பி னால் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கப்படுவதை கண்டித்து கோவையில் திங்களன்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலம், தார் நகரில் போஜ்சாலாவில் கமால் மவுலா மசூதி உள்ளது. இதில், இஸ்லாமிய மக்கள் பல தலைமுறையாக வழிபட்டு வருகின் றனர். இந்த மசூதி இந்து கோயில் மீது கட்டப்பட்டது என திட்டமிட்டு சங்பரி வார் அமைப்பினர் புகார் எழுப்பினர். ஒன்றிய அரசின் 1991ஆம் ஆண்டு சட்டத்தை ஆதாரம் காட்டி 2003ஆம் ஆண்டு தொல்லியல் துறை இசுலாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்தது. ஆனால் மத்திய பிரதேச உயர்நீதி மன்றம் இசுலாமியர்கள் உள்ளே வரக் கூடாது என்றும், அந்த இடம் இந்துக்க ளுக்கு உரியது என்று அண்மையில் தீர்ப்பளித்தது. இசுலாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் நீதி மன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோவை சிவானந்த காலனி, டாட பாத் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் கோவை மாவட்ட தலைவர் ஜெரோம் ரோட்டரிக் போராட்டத்திற்கு தலைமையேற்றார். கோரிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர் சாதிக் பாட்சா, பொருளாளர் எஸ்.கருப்பையா ஆகியோர் உரையாற்றினர். சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் அமைப் பபாளர் என்.ஆர்.முருகேசன் சிறப்புரை யாற்றினார். முடிவில், குழந்தை ராஜ் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.