இஸ்லாமிய மக்களின் கோரிக்கை ஏற்பு முதல்வரின் அறிவிப்புக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்பு
31 Jan 2026, 3:56 pm
<p><strong>இஸ்லாமிய மக்களின் கோரிக்கை ஏற்பு முதல்வரின் அறிவிப்புக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்பு</strong></p>
<p>சென்னை, ஜன.31 - இஸ்லாமிய மக்களின் சில கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்கிறது. மேலும், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் நினைவு தினத்தை அரசு விழா வாக நடத்திட வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது (Ex.MLA), மாநில பொதுச் செயலாளர் பி.செந்தில் குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மஹல்லா ஜமாத்துகளின் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்று, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக் கைகளை ஏற்று, 1537 உலமாக்களின் குடும்ப ஓய்வூ தியத்தை ரூ.2000 ஆக உயர்த்தியதையும், ஆயிரம் உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியத்தை ரூ.50,000 ஆக உயர்த்தியதையும், கோவை மாவட் டத்தில் வக்பு தீர்ப்பாயம் அமைக்கும் அறிவிப்பை யும் வரவேற்கிறோம். குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையான அடிப்ப டைத் தேவையாக உள்ள கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் இல்லாத இடத்தில் மாநகராட்சிகள், அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என்பதையும், காலியாக உள்ள 10 உருது மொழி ஆசிரியர்களின் நியமன அறிவிப்பையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதில் பல கோரிக்கைகள் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தவை யாகும். சிறுபான்மை மக்களின் ஏனைய கோரிக் கைகளையும் நிறைவேற்றிட வேண்டுகிறோம். கேரளத்தில் பிறந்தாலும் தமிழ்நாட்டின் மக னாக வாழ்ந்தவர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப். இவர் விடுதலைப் போராட்ட வீரர்; 1937-இல் சென்னை சட்டமன்ற உறுப்பினர்; பெரியாருடன் இணைந்து வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று தலைமை தாங்கியவர்; பிரிட்டிஷ் அரசின் குற்ற பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வெற்றி கண்ட வழக்கறிஞர்; மகாத்மா காந்தி ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுக்கு நெருக்கமான தேசியவாதி போன்ற பல்வேறு பரிணாமங்களை கொண்டவர். அவரது நினைவை போற்றும் வகையில் மதுரை யில் அவருக்கு மணிமண்டபம் அமைப்பதோடு அரசு விழாவாக நடத்திட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.</p>
