சிறுபான்மை மக்கள் நலக்குழு மதநல்லிணக்க இப்தார் விருந்து
19 Mar 2026, 3:18 pm
<p><strong>சிறுபான்மை மக்கள் நலக்குழு மதநல்லிணக்க இப்தார் விருந்து</strong></p>
<p>தென்காசி, மார்ச் 19- தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் புத னன்று மாலை தென்காசி மவுண்ட் ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம் இறக்கத்தில் உள்ள பாபாக்கி திருமண மண்டபத்தில், சர்வ மதத்தினரும், சமூக ஆர்வலர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்ட மதநல்லிணக்க இப்தார் விருந்து நோன்பு திறக்கும் நிகழ்வு மாவட்ட தலைவர் சங்கரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலா ளர் உச்சிமாகாளி, நலக்குழு மாவட்ட செய லாளர் அயுப்கான், பொருளாளர் ராஜீ, துணை செயலாளர் மாரியப்பன், மற்றும் முஸ்லிம் லீக் நகர பொறுப்பாளர்கள் கட்டி அப்துல் காதர், முகம்மது அலி, விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் சித்திக், தமுமுக மாவட்ட செயலாளர் சலீம், நகர் மன்ற உறுப்பினர் முகம்மது ராசப்பா, அகஸ்டின், மாதர் சங்க மாவட்ட செய லாளர் ஆயிஷா, சிறுபான்மை நலக்குழு மாவட்ட துணை செயலாளர் சேட், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொறுப்பா ளர் பட்டமுத்து, மற்றும் ஹைதர் அலி பக்கீர் மைதீன், சிபிஎம் வட்டார செயலா ளர் பட்டாபிராமன், வணிகர் சங்க செயலா ளர் பரமசிவன், கிருஷ்ணன் அனஸ் என்ற மாரியப்பன் மற்றும் இஸ்லாமிய ஜாமாத் தார்கள் என சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டனர். பக்ருதீன் நன்றி கூறினார்.</p>
