பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் 88ஆவது நினைவு நாள் மதுரையில் சிறுபான்மை மக்கள் நலக் குழு அஞ்சலி
5 Mar 2026, 3:59 pm
<p><strong>பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் 88ஆவது நினைவு நாள் மதுரையில் சிறுபான்மை மக்கள் நலக் குழு அஞ்சலி</strong></p>
<p>மதுரை, மார்ச் 5- சுதந்திரப் போராட்ட வீரரும், ‘ரோஜாப்பூ துரை’ என மதுரை மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட வருமான பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் 88 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் யானைக்கல் காந்தி சிலை அருகே அமைந்துள்ள ஜார்ஜ் ஜோசப் அவர்களின் திருவுருவச் சிலை முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பி.ரசூல் தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி துணை மேயர் (பொ) தி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ஜீவா, டி.குமரவேல் எம்.சி., அமைப்பின் மாவட்டச் செயலாளர் என்.கணேசன் மூர்த்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும், ஜார்ஜ் ஜோசப் அவர்களின் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் ஜார்ஜ் ஜோசப் (அவரின் பேரனுடைய மனைவி), அலெக்சி ஜோசப் (முதலாம் தலைமுறை பேரப்பெண்), பினோய் டி. ஜார்ஜ் (அலெக்சி ஜோசப்பின் கணவர்) ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேபோல், தூய மரியன்னை பேராலய பங்கு தந்தை ஜெரோம் ஹென்றி, பல்சமய உரையாடல் குழு இயக்குநர் பால் பிரிட்டோ, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலக் குழு உறுப்பினர் பெனடிக் பர்னபாஸ், மாவட்ட பொருளாளர் எம்.ஜான்சன், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் மதிபாரதி, செய லாளர் ஆ.பாலமுருகன், பொருளாளர் மணிகண்டன், 49-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏ.செய்யது அபுதாகீர், திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜோசப் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜார்ஜ் ஜோசப்பின் சேவையை நினைவுகூரும் வகையில் மதுரையில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வும், அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து கொண்டாடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.</p>
