தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாய ஆலைகளில் விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை: அமைச்சர்கள் எச்சரிக்கை

3 Jun 2026, 10:37 pm
சாய ஆலைகளில் விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை: அமைச்சர்கள் எச்சரிக்கை
<p><strong>சாய ஆலைகளில் விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை: அமைச்சர்கள் எச்சரிக்கை</strong></p><p>நாமக்கல், ஜூன் 3- சாய ஆலைகளில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிக ளில் செயல்படும் சாய மற் றும் சலவை ஆலைகளில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தலைமையில் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு, பராமரிப்பு மற் றும் கழிவுநீர் மறுசுழற்சி நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அர சின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல் படும் தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கவும், தேவையெனில் மூடவும் அதி காரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். மேலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர். ஆய்வில், சுத்திகரிப்பு வசதி இன்றி கழிவுநீர் வெளியேற் றிய ஒரு சாய ஆலை மூட உத்தரவிடப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட மற்றொரு தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.