அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி தீக்கதிர் சந்தா அளிப்பு!
4 Jul 2026, 9:44 pm
<p><strong>அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி தீக்கதிர் சந்தா அளிப்பு!</strong></p><p>ஈரோடு, ஜூலை 4 - ஈரோடு மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் தீவிர மாக நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக, கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற சந்தா சேகரிப்பின் போது, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தீக்கதிருக்கு ஆண்டுச் சந்தா வழங்கினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னரும், தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளருமான என். பாண்டி சந்தா வைப் பெற்றுக் கொண்டார். இதேபோல, ஈரோட்டில் கைத் தறி, துணி நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி, மொடக் குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டி. சண்முகம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.கே. ஆனந்த் மோகன் மற்றும் பவானி சாகர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி. தமிழ்செல்வி ஆகியோ ரும் தீக்கதிர் நாளிதழுக்கு ஆண்டு சந்தா வழங்கினர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர். கோமதி, எஸ். சுப்பிர மணியன், எஸ்.வி. மாரிமுத்து, பி. சுந்தரராஜன், கே. மாரப்பன், மாவட் டக்குழு உறுப்பினர் கே.எம். விஜய குமார், விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.எம். முனுசாமி, மூத்த தோழர்கள் வாசுதேவன், எஸ்.ஏ. ராமதாஸ், வி.சி. நந்த குமார் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
