அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்கள் வழங்கினர்
4 Dec 2025, 3:52 pm
<p><strong>அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்கள் வழங்கினர் </strong></p>
<p>அறந்தாங்கி, டிச.4- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 258 மாணவிகளுக்கும், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 137 மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ.வி மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், நகர்மன்ற தலைவர் இரா. ஆனந்த், துணைத் தலைவர் தி. முத்து, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் மாயகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கார்த்திகா, தாமரை செல்வன், நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
