முந்தய பக்கம்

இலங்கைத் தமிழர் முகாம்களில் அமைச்சர்கள் ஆய்வு

7 Jun 2026, 1:59 am
இலங்கைத் தமிழர் முகாம்களில் அமைச்சர்கள் ஆய்வு
<p><strong>இலங்கைத் தமிழர் முகாம்களில் அமைச்சர்கள் ஆய்வு</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூன் 6- ராணிப்பேட்டை மாவட்டம் திரு மலைச்சேரி மற்றும் பாணாவரம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்க ளில், அமைச்சர்கள் க. தென்னரசு (வெளி நாடு வாழ் தமிழர் நலம்) மற்றும் வ. காந்திராஜ் (கூட்டுறவுத் துறை) ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர். மாவட்ட ஆட்சி யர் ந. ப்ரியா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. திருமலைச்சேரி முகாம்: 293 குடும்பங்கள் வாழும் இங்கு, வீடுகளுக்கே சென்று குறைகளை கேட்டறிந்த அமைச்சர்கள், ரூ.20 லட்சம் மதிப்பில் அமையும் நூலகப் பணிகள், ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு சீருடை களை வழங்கினர். 102 குடும்பங்கள் வாழும் இங்கு, புதிய குடியிருப்புகளின் சாவிகளைப் பயனாளிகளிடம் ஒப்படைத்த தோடு, சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளையும் நட்டனர். கோரிக்கைகள் நிரந்தர குடியுரிமை, அரசு கல்லூரி களில் மாணவர் சேர்க்கை, புதிய வீடு கள், பாதுகாப்பு சுற்றுச்சுவர் மற்றும் கொசுத் தொல்லைக் கட்டுப்பாடு ஆகிய கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர். அமைச்சரின் உறுதி: &quot;முதலமைச்சரின் உத்தரவின்படி கோரிக்கைகள் அனைத்தும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிறை வேற்றப்படும்; வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்&quot; என அமைச்சர் க. தென்னரசு உறுதியளித்தார். மேலும், சுகாதாரம் மற்றும் குடிநீர் புகார்களை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram