தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெருந்துறை தொழிற்பூங்காவில் அமைச்சர்கள் ஆய்வு

5 Jul 2026, 1:21 am
பெருந்துறை தொழிற்பூங்காவில் அமைச்சர்கள் ஆய்வு
<p><strong>பெருந்துறை தொழிற்பூங்காவில் அமைச்சர்கள் ஆய்வு</strong></p><p>ஈரோடு, ஜூலை 4- ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற் றும் வர்த்தகத்துறை அமைச் சர் ச.கீர்த்தனா மற்றும் கைத் தறி, துணி நுால் மற்றும் காதித்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி ஆகியோர் வெள்ளியன்று ஆய்வு மேற் கொண்டனர். தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சமச்சீரான வட்டாரத் தொழில்துறை வளார்ச்சியை ஊக்குவிக் கும் விதமாக அமைச்சர் ச.கீர்த்தனா பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் தொழில்துறை வளர்ச்சிப் பணிகள், உள்கட்ட மைப்பு உருவாக்கம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், தண்ணீர் விநியோக அமைப்புகள், விரிவான சாலை வசதிகள், காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட தண்ணீர் விநியோக ஏற்பாடுகள், மேல்நிலை நீர்த்தேக் கத் தொட்டிகள் ஆகியவற்றை பற்றி அலு வலர்களிடம் கேட்டறிந்தார். அத்துடன், புதிய பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பிராந்தியத்தின் வளர்ச்சி சாத்தி யக் கூறுகளை மதிப்பிடவும் சிப்காட் தொழில் பூங்காவில் நிலம் பெற்ற நிறுவன பிரதிநிதிகள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு தீர்வு காணு வது குறித்தும் கலந்துரையாடினர். தொடர்ந்து, சிப்காட்டில் உள்ள தனியார் நிறு வனங்களில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ் குமார், சிப்காட் செயற்பொறியாளர் பசு பதி, சிப்காட் திட்ட அலுவலர் சுஜா பிரிய தர்ஷினி மற்றும் சிப்காட் அலுவலர்கள் உட் பட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.