7,000 மாணவர்கள் பங்கேற்ற கல்வி கண்காட்சி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>7,000 மாணவர்கள் பங்கேற்ற கல்வி கண்காட்சி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்</strong></p>
<p>ஆவடி, ஜன. 7- ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி யில் கல்வி கண்காட்சியை அமைச்சர்கள் சா.மு.நாசர், அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆவடி அருகே பருத்திப்பட்டு மகா லட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பள்ளி மாணவர்க ளுக்கான கல்வி கண்காட்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதற்கு கல்வி குழு மத்தின் தலைவர் சு.குஞ்சிதபாதம் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சு.கு.திருக்குமரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அனிதா ராமன் வரவேற்றார். இதில் அமைச்சர்கள் சா.மு.நாசர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகி யோர் கலந்து கொண்டு கல்வி கண்காட் சியை தொடங்கி வைத்து உரையாற்றி னர். இந்த கண்காட்சியில் சென்னை திரு வள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனி யார் பள்ளிகளில் இருந்து 7,000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்ற னர். இந்த கண்காட்சியில் புத்தக அறிவைத் தாண்டி நேரடி கற்றல் அனுபவங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன.</p>
