தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வானில் பறக்கும் அமைச்சர்களும் மண்ணில் கிடக்கும் உண்மைகளும்! - ப.சிதம்பரம் எம்.பி.,

11 Feb 2026, 5:52 pm
வானில் பறக்கும் அமைச்சர்களும் மண்ணில் கிடக்கும் உண்மைகளும்! - ப.சிதம்பரம் எம்.பி.,
<p><strong>வானில் பறக்கும் அமைச்சர்களும் மண்ணில் கிடக்கும் உண்மைகளும்!</strong></p> <p>என் முன்னே இருந்த நிதியமைச்சரின் பட்ஜெட் உரையை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்த்தேன். அதன் 14-ஆவது பத்தியில், &ldquo;சீர்திருத்த எக்ஸ்பிரஸ் (Reform Express) சரியான வேகத்தில் பயணிக்கிறது&rdquo; என்று ஒரு வரி இருந்தது. அந்த வரியை வாசிக்கும்போது எனக்கு வியப்பாகவும், ஒருவிதத்தில் வருத்த மாகவும் இருந்தது. நிதியமைச்சர் அவர்களே, உங்கள் &lsquo;சீர்திருத்த எக்ஸ்பிரஸ்&rsquo; தடம் புரளவில்லை &nbsp;என்றாலும், அது ஓரிடத்தில் நகர முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. எண்கள் சொல்லும் எதார்த்தம் பொருளாதார ஆய்வறிக்கை என்பது நிதி யமைச்சகத்தின் பொருளாதாரப் பிரிவு மிகக் கடின மாக உழைத்துத் தயாரிக்கும் ஒரு ஆவணம். 700-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த &nbsp;ஆய்வறிக்கையை இந்த அரசின் அமைச்சர்கள் படிக்கிறார்களா என்பதே என் சந்தேகம். தலை மைப் பொருளாதார ஆலோசகர் எதார்த்த நிலை யைச் சுட்டிக்காட்ட முயல்கிறார். ஆனால், அமைச் சர்களோ நாம் வாழும் பூமியை விட்டுவிட்டு வேறு ஏதோ கிரகத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். புள்ளி விவரங்கள் பொய் சொல்லாது. 2023-24இல் 12 சதவீதமாக இருந்த பெயரளவு வளர்ச்சி (Nominal Growth), 2024-25 இல் 9.8 &nbsp;சதவீதமாகச் சரிந்து, இப்போது 8 சதவீதத்திற்கு வந்து நிற்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதம் இப்படித் தொடர்ச்சியாகச் சரிந்து கொண்டி ருக்கும்போது, &lsquo;வேகம் எடுக்கிறோம்&rsquo; என்று எப்படிச் சொல்ல முடிகிறது? நுகர்வோர் விலை குறியீடு (CPI) மற்றும் மொத்த விலை குறியீடு (WPI) ஆகியவற்றின் குறைவான எண்களைக் காட்டி, நிஜமான ஜிடிபி வளர்ச்சி என மாயாஜாலம் காட்டலாம். ஆனால், குறைந்து வரும் பெயரளவு வளர்ச்சியை யாராலும் மறைக்க முடியாது. கிராமப்புற இந்தியாவின் மீதான தாக்குதல் இந்த பட்ஜெட்டில் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தது, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் செய்யப்பட்டுள்ள கொடூரமான நிதி வெட்டுக்கள். ஒரே அமைச்சரின் கீழ் வரும் இந்தத் துறைகளில் மட்டும் சுமார் 60,000 கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மீது உங்களுக்கு என்ன கோபமோ ? விவசாயத் துறை: 6,985 கோடி ரூபாய் வெட்டு. கிராமப்புற மேம்பாடு: 53,674 கோடி ரூபாய் வெட்டு. பிரதமர் கிராமச் சாலைத் திட்டம்: 60,000 கோடி ரூபாய் குறைவாகச் செலவிடப்பட்டுள்ளது. வீட்டு வசதித் திட்டம் (PMAY): 22,000 கோடி ரூபாய் குறைப்பு. கிராமப்புற மக்களுக்குச் சாலைகள் தேவை யில்லையா? அவர்களுக்கு வீடுகள் தேவை யில்லையா? மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியில் 30,000 கோடி ரூபாயைக் குறைத்து விட்டு, பிறகு மாநில அரசுகளைக் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? ஜல் ஜீவன் மிஷனும், தற்கொலைகளும் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு 67,000 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டு, வெறும் 17,000 கோடி ரூபாயை மட்டுமே செலவு செய்திருக்கிறது இந்த அரசு. மீதமுள்ள 50,000 கோடி ரூபாய் எங்கே போனது? இதோ இன்று ஒரு செய்தித்தாளில் வாசித்தேன்: ஒரு தலித் கிராமத்தில் நான்கு சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். அந்தக் கிராமத்தில் குழாய் தண்ணீரோ, கழிப்பறையோ இல்லை. மக்கள் அசுத்தமான தண்ணீரைக் குடித்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசு ஒதுக்கிய நிதியைச் செலவிடாமல் வைத்திருக்கிறது. இது நிர்வாகத் திறமையின்மையா அல்லது மக்களின் மீதான அலட்சியமா? இளைஞர்களின் ஏமாற்றம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது இன்று மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. 15 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு நிதியமைச்சர் ஆரவாரமாக அறிவித்த &lsquo;இன்டர்ன்ஷிப்&rsquo; திட்டம் என்னவானது? 1,65,000 வாய்ப்புகளில் வெறும் 33,000 பேர்தான் சேர்ந்தார்கள். அதிலும் 6,000 பேர் பாதியிலேயே வெளியேறிவிட்டார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களை வற்புறுத்தித் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் ஏன் இவ்வளவு மோச மாகத் தோல்வியடைந்தது என்பதற்கு நிதி யமைச்சரிடம் விளக்கம் இருக்கிறதா? ஒளித்து வைக்கப்பட்ட &nbsp;நிதிப் பற்றாக்குறை நிதியமைச்சர் தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை (4.4%) எட்டிவிட்டதாகப் பெருமைப் படலாம். ஆனால் இது எப்படிச் சாத்தியமானது? &bull;&nbsp;&nbsp; &nbsp;ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்த 3 லட்சம் கோடி ரூபாய் &lsquo;போனஸ்&rsquo; ஈவுத்தொகை. &bull;&nbsp;&nbsp; &nbsp;மக்களுக்கான நலத்திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் (Capital Expenditure) செய்யப்பட்ட ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டு. இந்த இரண்டையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதத்தைத் தாண்டியிருக்கும். நீங்கள் காட்டும் எண்கள் வெறும் காகித அலங்காரம் மட்டுமே. கஞ்சத்தனம் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 1.6% (GDP-யில்) ஆகக் குறைந்துள்ளது, இது ஒரு வரலாற்றுச் சரிவு. அறிவியல் துறையும், நகர்ப்புற மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவிடாமல் முடக்கி வைத்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்த பட்ஜெட் முற்போக்கானது அல்ல; இது ஒரு &lsquo;பார்சிமோனியஸ்&rsquo; (Parsimonious) - அதாவது தேவையற்ற கஞ்சத்தனம் கொண்ட பட்ஜெட். கடந்த ஆண்டு இந்த அவையில் கொடுத்த வாக்குறுதிகளை நிதியமைச்சரே மறந்துவிட்டார். அதனால்தான் இதை ஒரு &lsquo;மறக்கப்பட வேண்டிய பட்ஜெட்&rsquo; என்கிறேன். செய்தித்தாள்களில் இருந்து ஏற்கெனவே மறைந்துவிட்ட இந்த பட்ஜெட், மக்களின் இதயங்களிலிருந்தும் விரைவில் மறைந்துவிடும். மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ஆற்றிய உரையின் பகுதிகள்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.