164 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா அமைச்சர்கள் வழங்கினர்
19 Jan 2026, 2:23 pm
<p><strong>164 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா அமைச்சர்கள் வழங்கினர்</strong></p>
<p>திருப்பூர், ஜன.19- தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட 164 பயனாளிகளுக்கு ரூ.83.26 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் வழங்கினர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட மூல னூர், கன்னிவாடி, முளையாம்பூண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 164 பயனாளிகளுக்கு ரூ.83.26 லட்சம் மதிப்பீட்டில் வீட் டுமனைப்பட்டாக்களை திங்களன்று மூலனூர் பேரூராட்சி, அண்ணா நகர், சந்தை வளாகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் வழங்கினர். மேலும், மூலனூர் ஊராட்சி ஒன்றி யம், கிளாங்குண்டல் ஊராட்சி, பட்டுத்துறையில் மாநில அரசு நிதியின் கீழ் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் மூலனூர் – சின்னியக்கவுண்டன்வலசு சாலை வழியில் கிளாக்குண்டல் மூலக்கடையில் ஏற்கனவே உள்ள தாம்போகிக்கு பதிலாக உயர் மட்ட பாலம் கட்டும் பணியினை துவக்கி வைத்த னர். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புக ளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
