முந்தய பக்கம்

இழப்பீட்டுத் தொகை வழங்கிய அமைச்சர்

21 Nov 2025, 2:51 pm
இழப்பீட்டுத் தொகை வழங்கிய அமைச்சர்
<p><strong>இழப்பீட்டுத் தொகை வழங்கிய அமைச்சர்&nbsp;</strong></p> <p>&nbsp;சிவகங்கை,நவ.21- சிவகங்கை மாவட்டம். திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட எஸ்.செவல்பட்டி கிராமம் மற்றும் சிங்கம்புணரி வட்டத்தி ற்குட்பட்ட மல்லாக்கோட்டை ஆகிய பகுதிகளில் எதிர்பாராத விதமாக &nbsp;ஏற்பட்ட மின் விபத்தின் காரணமாக உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு &nbsp;மொத்தம் ரூ.1,25,000 &nbsp;மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகைக்கான காசோலை யினை &nbsp;கூட்டுறவுத்துறை &nbsp;அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார். &nbsp;திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையப் பகுதியில் நவம்பர் 21 அன்று நடை பெற்ற அரசு நிகழ்ச்சியில் , திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, &nbsp; &nbsp; &nbsp;துணை தலைவர் கான்முகமது, தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியளார் (பொ)ஜான் எஃப் கென்னடி மற்றும் &nbsp;திருப்பத்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram