முந்தய பக்கம்

விடுதிகளில் தரமற்ற உணவு: அமைச்சர் எச்சரிக்கை

30 May 2026, 11:48 pm
விடுதிகளில் தரமற்ற உணவு: அமைச்சர் எச்சரிக்கை
<p><strong>விடுதிகளில் தரமற்ற உணவு: அமைச்சர் எச்சரிக்கை</strong></p><p>கோவை, மே 30- ஒண்டிப்புதூரில் உள்ள பழங்குடியினர் மற்றும் சமூகநீதி துறை மாணவிகள் விடுதி களில் ஆய்வு செய்த அமைச்சர் வன்னியரசு, மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை என ஒப்பந்த தாரர்கள் எச்சரிக்கை விடுத்தார். கோவை ஒண்டிப்புதூரில் உள்ள பழங் குடியினர் மற்றும் சமூகநீதி துறை மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட தாக புகார்கள் எழுந்த நிலையில், அமைச்சர் வன்னியரசு சனியன்று நேரில் ஆய்வு மேற் கொண்டார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார், துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப் பினர்களுடன் விடுதிகளை பார்வையிட்ட அவர், மாணவிகளிடம் நேரடியாக குறை களை கேட்டறிந்து, அவர்களுடன் இணைந்து உணவருந்தி உணவின் தரத்தை ஆய்வு செய் தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உணவில் கரப்பான் பூச்சி இருந்த தாகவும், தரம் குறைவாக இருப்பதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்ததால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். மாவட்ட ஆட்சியரின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram