தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல்கலைக்கழக வேந்தர் பதவி விவகாரம்; அமைச்சர் விஸ்வநாதன் கருத்துக்கு எதிர்ப்பு

27 May 2026, 10:03 pm
பல்கலைக்கழக வேந்தர் பதவி விவகாரம்;  அமைச்சர் விஸ்வநாதன் கருத்துக்கு எதிர்ப்பு

பல்கலைக்கழக வேந்தர் பதவி விவகாரம்; அமைச்சர் விஸ்வநாதன் கருத்துக்கு எதிர்ப்பு

சென்னை, மே 27 - பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வ நாதன் தெரிவித்த கருத்து பரவலான கண்ட னங்களை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், புதிய அரசு பொறுப் பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதல மைச்சர் எடுப்பார் என்றும், கடந்த அரசின் முறைகளை தாங்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதலோடு இதனை நெறிமுறைப்படுத்துவார் என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர், முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அன்றைய ஆளுநர் ஒப்புதல் மறுத்து கிடப்பில் போட்டி ருந்தார்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியபோது, சுமார் 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கி அவை சட்டமாகி விட்டதாக நீதிமன்றமே அறி வித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

அந்தச் சட்டம் தற்போது குடி யரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அமைச்சர் விஸ்வநாத னின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தக் கருத்தை கடுமையாகக் கண்டித்த விசிக பொதுச்செயலாளர் து. ரவிக்குமார், இது மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு போராடிப் பெற்றதை கைவிடுவது மட்டு மல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவ மதிப்பதாகும் என்று தெரிவித்தார்.

மேலும் அமைச்சர், இதை முதலமைச்சரின் ஒப்புத லோடு தான் சொல்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்ட நிலைப்பாட்டை மாற்ற புதிய அரசு எந்த முயற்சியும் செய்யக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமை களை தாரை வார்த்ததாக அமையும் என்றும் எச்சரித்துள்ளார்.

உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்று அதற்கு எதிராக பேசுவது, பதவி சுகத்துக்காக காங்கிரஸ் தனது கொள்கையை மாற்றிக்கொண்டதை வெளிப்படுத்துவதாகும் என்று திமுக சார்பில் கடுமையாக கண்டித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.