தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடந்த கால முறைகேடுகள் குறித்து தனி ஆணையம் விசாரணை நடத்தும் உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் பேட்டி

25 May 2026, 9:35 pm
கடந்த கால முறைகேடுகள் குறித்து  தனி ஆணையம் விசாரணை நடத்தும்  உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் பேட்டி

கடந்த கால முறைகேடுகள் குறித்து தனி ஆணையம் விசாரணை நடத்தும் உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் பேட்டி

மதுரை, மே 25- கடந்த கால ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் நடைபெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யத் தமிழக அரசு சார்பில் தனி ஆணையம் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும் மேலூர் சட்டமன்ற உறுப்பினருமான பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் திங்களன்று மாவட்ட நிர்வா கம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுட னான அறிமுகக் கூட்டத்திற்குப் பின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், மதுரையின் போக்குவரத்து நெரிசல் மற்றும் கல்வித் துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்பு களை வெளியிட்டார்.

அறிமுகக் கூட்டம் அறிமுகக் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசிய அமைச்சர் பெ. விஸ்வநாதன், “முதல மைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஊழ லற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை அதி காரிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அதிகாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் வைக்கும் அநாகரிக மான விமர்சனங்களை நாங்கள் புறந்தள்ளு வோம்.

அதிகாரம் மாறியிருப்பதை உணராமல் பேசுபவர்களுக்குப் பதிலடி கொடுக்க எங்கள் கூட்டணி தயாராக உள்ளது” என்றார்.

ஸ்மார்ட் சிட்டி ஊழல் மற்றும் மதுரை திட்டங்கள் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு கள் குறித்த கேள்விக்கு, “கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்கப்பட உள்ளது.

அதனடிப்படையில் மதுரையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்துக் கண்டறிந்து, காரண மானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப் படுவதோடு, விடுபட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

மதுரையின் போக்குவரத்து நெரி சலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும்.

மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பேருந்து நிலையப் போக்கு வரத்து நெரிசலைச் சீரமைக்க மேம்பாலங் கள் மற்றும் மாற்று வழிகளுக்கான வரைவுத் திட்டங்களைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

கௌரவ விரிவுரையாளர்கள் உயர்கல்வித் துறையின் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பேசிய அமைச்சர், “நான் பொறுப்பேற்றவுடன் கௌரவ விரிவுரையா ளர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை முதன்மை யாகக் கையில் எடுத்துள்ளேன்.

காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்கும், தகுதி வாய்ந்த கௌரவ விரிவுரையாளர்களை முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்வதற் கும் சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து, முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதலின்படி விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லாணை, கார்த்திக், தங்கப்பாண்டி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.