பள்ளியில் தவெக நிகழ்ச்சி ஒளிபரப்பு விவகாரம் அமைச்சர் விஸ்வநாதனின் சர்ச்சை பேச்சு
1 hour before
<p><strong>பள்ளியில் தவெக நிகழ்ச்சி ஒளிபரப்பு விவகாரம் அமைச்சர் விஸ்வநாதனின் சர்ச்சை பேச்சு</strong></p><p>சென்னை: கரூரில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட த.வெ.க நிகழ்ச்சி ஒரு அரசுப் பள்ளி யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது சமூக ஊடகங் களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாண வர்களுக்குக் காட்டக் கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித் திருந்த நிலையில், அதை மீறி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி யில் த.வெ.க நிகழ்ச்சி நேரலையாகக் ஒளி பரப்பப்பட்டதாகக் கூறி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார். இந்நிலையில், அழகு முத்துக்கோனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூ ரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனிடம், அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய்யின் உரை நேரலையாக ஒளிபரப்பா னது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு ‘அதில் என்ன இருக்கிறது’ எனக் கேள்வியைத் தவிர்க்க முயன்ற அவர், தொடர்ந்து ஊடகவியலாளர்கள் வலியுறுத்திய போது, ‘இது புதுசு கிடையாது, இதற்கு முன்பும் எல்லா அளவிலும் இப்படி நடந்திருக் கிறது’ எனப் பதிலளித்தார். இதற்கு முன் யார் இப்படிச் செய்திருக்கிறார்கள் எனக் கேட்ட தற்கு, ‘பண்ணியிருக்காங்க, அவ்வளவுதான், இதற்கு மேல் கேள்விக்கு இடமில்லை’ என்று கூறிவிட்டுச் சென்றார். அமைச்சர் விஸ்வ நாதன் இதைச் சரியென்ற தொனியில் பேசி யது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
