தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்கும்! கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் ரவி பேட்டி

23 Sept 2026, 10:51 pm
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்கும்! கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் ரவி பேட்டி

கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்கும்! கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் ரவி பேட்டி

கும்பகோணம், செப்.23 -கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது பற்றியும், முறை பாசனம் குறித்தும் நீர்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கும்பகோணத்தில் அமைச்சர் வினோத்ரவிகூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாயன்று அமைச்சர் வினோத்ரவி தலைமை வகித்து காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மாவட்ட ஆட்சியர் ரேவதிமுன்னிலைவகித்தார்.

மீனவர்களுக்கு உதவி

தொடர்ந்து பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம், பாக்வளைகுடா சிறப்பு திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் கடல் மீனவர், உள் நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 33 மீனவர்களுக்கு 40 சதவீதம் மானிய விலையில் ரூ.24,83,986 மதிப்பில் குளிர் காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனத்தை அமைச்சர் வினோத்ரவி வழங்கி வழங்கினார்.

அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பள்ளி

களில் கூடுதலாக 53,200 மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர். கடைமடை பகுதிகளுக்குதண்ணீர் செல்வது தொடர்பாகவும், முறைபாசனத்தை நீக்குவது குறித்தும் விரைவில் நீர்வளத் துறை சார்பில்நடவடிக்கை எடுக்கப்படும். கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அந்த தூர்வாரும் பணிகள்முடிந்ததும் தண்ணீர் திறந்து விடப்படும்” என்றார்.பின்னர் பழவாத்தான் கடளை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிமாணவர்களுக்கான ஆயத்த பயிற்சி மையத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில்கும்பகோணம்மாநகராட்சி மேயர் சரவணன், ஆணையர் சுதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.