அரசு அதிகாரிகள் பணியை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக பால்வளத்துறை அமைச்சர் ஆதங்கம்
15 Jun 2026, 11:54 pm
<p><strong>அரசு அதிகாரிகள் பணியை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக பால்வளத்துறை அமைச்சர் ஆதங்கம்</strong></p><p>நாமக்கல், ஜூன் 15- அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஒரு சில அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு பணியாற்றுவதற்கு லஞ்சம் பெறுவ தாக பால்வளத்துறை அமைச்சர் ஆதங் கத்துடன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்களன்று ஊராட்சிக்குட்பட்ட 15 பஞ் சாயத்துகளை சேர்ந்த அரசு அலுவலர் கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி கலந்து கொண்டு பஞ்சாயத்து பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் எடுத்துரைத்து பேசி னார். அப்பொழுது விஜயலட்சுமி பேசும் பொழுது, ஊராட்சி பகுதியில் பணியாற் றும் ஒரு சில அதிகாரிகள், மக்கள் பணி செய்வதற்காக லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் மத்தியில் இருந்து புகார் கள் வருகிறது. இந்த புகார்கள் முதல்வ ரின் தனிப்பிரிவிற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரியின் பெயருடன் தெரிவிக் கிறார்கள். எனவே அதிகாரிகள் நேர்மை யாக மக்களுக்காக பணியாற்ற வேண் டும். லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.</p>
