நெசவுத் தொழிலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்
1 hour before
<p><strong>நெசவுத் தொழிலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்</strong></p><p>அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வில் உறுதி தேனி, ஜூன் 24- ஆண்டிபட்டி அருகே உள்ள அண்ணா கூட்டுறவு நூற் பாலையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச் சர் விஜய் பாலாஜி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர். ஆய்வின்போது, கூட்டுறவு நூற்பாலையின் உற்பத்தி நிலை, பணியாளர்களின் விவரங்கள், இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என்றார். மேலும், தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரி வித்தார். நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நெசவுத் தொழிலை மீட்டெடுத்து மேம்படுத்துவதே அரசின் முக்கிய நோக் கம் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளதாக கூறினார். மேலும், தனியார் நிறுவனங்களுக்கு நிகராக கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் இளைஞர்களுக்கு அதிகள வில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அரசின் இலக் காகும் என்றும், துறையில் உள்ள குறைபாடுகளை கண்ட றிந்து அவற்றை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
