தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள், 2 நூலகங்கள் அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார்

6 Jul 2026, 12:11 am
காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள், 2 நூலகங்கள் அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார்
<p><strong>காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள், 2 நூலகங்கள் அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார்</strong></p><p>வேலூர், ஜூலை 5– வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ரூ.5.92 கோடி மதிப்பில் 23 புதிய வகுப்பறைகள், ரூ.44 லட்சம் மதிப்பில் இரண்டு நூலகக் கட்டிடங்கள் மற்றும் ரூ.49 லட்சம் மதிப்பில் மூன்று அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் ரூ.6.85 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனி ருந்த இந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்தி யாளர்களைச் சந்தித்த அமைச்சர், காட்பாடி பகுதிகளில் நிலவும் சாலை ஆக்கிர மிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைக்கு திருமுருக கிருபானந்த வாரியார் பெயரைச் சூட்டுவது குறித்த முன்னாள் அமைச்சர் துரை முருகனின் கோரிக்கையை முதலமைச் சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரி சீலிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும், கைத்தறி நெசவாளர்களுக்கு முறையாக கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.