தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேனியில் நுகர்பொருள் கிடங்குகளில் அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு ‘தானியங்களை பாதுகாக்க அறிவியல் முறையில் சேமிப்பு வசதி’

11 Jul 2026, 8:52 pm
தேனியில் நுகர்பொருள் கிடங்குகளில் அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு ‘தானியங்களை பாதுகாக்க அறிவியல் முறையில் சேமிப்பு வசதி’
<p><strong>தேனியில் நுகர்பொருள் கிடங்குகளில் அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு ‘தானியங்களை பாதுகாக்க அறிவியல் முறையில் சேமிப்பு வசதி’</strong></p><p>தேனி, ஜூலை 11- தேனி, உப்பார்பட்டி, உத் தமபாளையம், போடிநாயக் கனூர் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உணவுக் கிட ங்குகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கட ரமணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின் போது அரிசி, பருப்பு, எண்ணெய் உள் ளிட்ட அத்தியாவசியப் பொருட் களின் இருப்பு மற்றும் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர், தரமற்ற பொருட்களை உட னடியாக மாற்றி, நியாய விலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையங்க ளுக்கு தேவையான பொருட் களை தாமதமின்றி அனுப்ப அதிகாரிகளுக்கு அறிவு றுத்தினார். தேனி மாவட்டத்தில் 15 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், தேவைக் கேற்ப நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என் றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், காலநிலை மாற் றத்தை கருத்தில் கொண்டு தானியங்களை பாதுகாக்க அறிவியல் முறையிலான சேமிப்பு வசதிகள் மேம் படுத்தப்பட்டு வருவதாக வும் கூறினார். சுமைத் தூக்கும் தொழி லாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை குறித்து ஆலோசனை நடத் தப்படும் என்றும் தெரிவித் தார். மேலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உணவு வழங்கல் துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறும் என்றும், ரேசன் பொருட்களின் தரம் மற்றும் கடத்தல் தொடர்பான புகார் களுக்கு தனித்தனி வாட்ஸ் அப் எண்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜ குமார், நுகர்பொருள் வாணி பக் கழக மண்டல மேலாளர் குணசேகர், உத்தமபாளை யம் வருவாய் கோட்டாட்சி யர் (பொ) பஞ்சாபகேசன், மாவட்ட வழங்கல் அலு வலர் நல்லையா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.