தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர் அகிலன் உடல் ஒப்படைப்பு அமைச்சர் வன்னியரசு உள்ளிட்டோர் அஞ்சலி

27 Oct 2026, 11:29 pm
மாணவர் அகிலன் உடல் ஒப்படைப்பு அமைச்சர் வன்னியரசு உள்ளிட்டோர் அஞ்சலி

மாணவர் அகிலன் உடல் ஒப்படைப்பு அமைச்சர் வன்னியரசு உள்ளிட்டோர் அஞ்சலி

கோவை, அக்.27-சாதிய துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் அகிலனின் உடலை பெற்றோர்கள் செவ்வாயன்று பெற்றுக்கொண்டனர். மறைந்த அகிலனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து அமைச்சர் வன்னியரசு மற்றும் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கோவையில் உயிரிழந்த மாணவர் அகிலனின் இல்லத்துக்கு செவ்வாயன்று நேரில் சென்ற சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, மாணவரின் இறுதி ஊர்வலத்தில்

பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதல்வரின் வழிகாட்டுதலின்படி வந்துள்ளேன். பள்ளிகளில்நீண்டகாலமாக நிலவும் சாதியப் பாகுபாட்டைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் சாதிப் பெயர்கள் இருக்க கூடாது என்பதே முதன்மையானது. இதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.இவ்வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முழுமையான விசாரணையின் அடிப்படையில்நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு பெரிய சாதிப் பின்னணி இருந்தாலும், தவறுசெய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். பள்ளி, கல்லூரி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.நீதியை பெறுவதற்கான இடம்தான் போராட்டக் களம். அமைச்சரவையில் இருந்துகொண்டு என்னென்ன செய்யமுடியுமோ அவற்றை செய்கிறேன்.

எட்டு பேர் அமைச்சராக வந்து விட்டோம் என்பதால் விடிவுகாலம் வந்துவிட்டது என நம்பவில்லை, இந்த சமூகம் சாதிய கட்டமைப்பு, சனாதன கட்டமைப்பு கொண்டது, அதை உடைக்க போராடி வருகின்றோம்.

எட்டு பேர் அமைச்சராக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை, போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது. சாதிய அழுக்குகளை வேறறுக்க வேண்டிய தேவை இருக்கிறது, சாதிய பாகுபாடுகளை களைகின்ற வரை சமூக விடுதலைக்காக போராட வேண்டியிருக்கிறது எனவும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.

முன்னதாக மாணவர் அகிலனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், தமிழ்நாடு தீ,ண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் மகேஷ், செயலாளர் நாகராஜ், திராவிட தமிழர் கட்சி சார்பில்வெண்மணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் அமுதா, பொருளாளர் தங்கமணி, வாலிபர் சங்க நகரப் பொருளாளர் சந்துரு உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.