மாணவர் பாரதிதாசனுக்கு கல்விக் கட்டணம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வன்னி அரசு விளக்கம்
20 Aug 2026, 9:39 pm

மாணவர் பாரதிதாசனுக்கு கல்விக் கட்டணம் நிறுத்தப்படவில்லை!

அமைச்சர் வன்னி அரசு விளக்கம்

சென்னை, ஆக.20மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் பாரதிதாசன்என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை மறுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில்வெளியான செய்தி தவறானது என அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.திமுக எம்.எல்.ஏ. கோவி. செழியனின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தகவல்பரப்பப்படுவதாகச் சாடினார்.மாணவர் பாரதிதாசனுக்குக் கல்விக் கட்டணமாக ரூ. 5 லட்சமும், இதர செலவுகளுக்காக ரூ. 31 லட்சமும் ஒதுக்கப்பட்டதாகவும், மாணவர் உரிய ஆவணங்களை வழங்காதபோதிலும், கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கட்டணம் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.மேலும், மாணவரின் ‘விசா’ சிக்கலைத் தீர்க்க முதல்வர், துறைச் செயலாளர் மற்றும் அமைச்சகம் சார்பில் ஒன்றிய அரசுக்குக் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறிய அவர், இவ்வாண்டு 362 மாணவர்கள் வெளிநாடுகளில் பயில உள்ளதாக தெரிவித்தார்.